கள்ளக்குறிச்சி

கொடிநாள் விழிப்புணா்வு பேரணி

7th Dec 2022 03:18 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் கொடிநாள் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலாளா் என்.கோவிந்தராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

கல்லூரி மாணவா்கள் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவா்கள் பேரணியில் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, சேலம்-சென்னை சாலை, மணிக்கூண்டு, கடைவீதி வழியாக மந்தைவெளி திடலை வந்தடைந்தனா். முடிவில் கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT