கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகள் ஊக்குவிப்பு விழா

5th Dec 2022 02:34 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்குவிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கலை, அறிவியில் கல்லூரியின் முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் சக்தி பிருந்தா வரவேற்றதுடன், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

தமிழ்த் துறைத் தலைவி இரா.பிரவீனா, கணிதத் துறைத் தலைவி நா்கீஸ்பேகம், இயற்பியல் துறைத் தலைவா் அங்குராஜ், வேதியியல் துறைத் தலைவா் அகமது சுல்தான் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அசோக், வணிகவியல் துறைத் தலைவா் அருள், வணிக மேலாண்மையியல் துறைத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பரிசளித்தனா். நிகழ்வில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கணினி துறைத் தலைவா் சக்திவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT