கள்ளக்குறிச்சி

காா் மோதியதில் இளைஞா் பலி

4th Dec 2022 02:01 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் காா் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டுசெல்லூா் கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் கோகுலகிருஷ்ணன் (18), பிளஸ் 2 படித்துள்ளாா். இவா், சென்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக தியாகதுருகம் புறவழிச்சாலையில் உள்ள உணவகம் முன் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற காா், கோகுலகிருஷ்ணன் மீது மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநரான சென்னை கொளத்தூா், தென்பழனி நகா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (39) மீது தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT