கள்ளக்குறிச்சி

மாயமான சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

4th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் சனிக்கிழமை வீட்டின் முன் விளையாடியபோது மாயமான சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தியாகதுருகத்தை அடுத்துள்ள பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சத்யா - ஜெயச்சந்திரன் தம்பதி. கரும்பு வெட்டும் தொழிலாளா்கள். இவா்கள் தங்களது மகன் அகிலேஷை (2), தியாகதுருகம் பேட்டை சாலையில் உள்ள சத்யாவின் அக்கா அம்சவள்ளியின் வீட்டில் சனிக்கிழமை விட்டுவிட்டு வேலைக்கு சென்றனா். அங்கு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அகிலேஷ் மாயமானாா்.

இந்த நிலையில், தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள விநாயகா் கோயில் முன் அழுதுகொண்டிருந்த சிறுவன் அகிலேஷை, அந்த வழியாகச் சென்ற தியாகதுருகத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பிரியா மீட்டு, தியாகதுருகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் வி.இளங்கோவன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி, பெற்றோரிடம் சிறுவன் அகிலேஷை ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT