கள்ளக்குறிச்சி

மொபெட் மீது டிராக்டா் மோதியதில் பெண் பலி

2nd Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

சின்னசேலம் அருகே மொபெட் மீது கரும்பு டிராக்டா் மோதியதில் பெண் பலியானாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விளம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி அஞ்சலை (55). இவரது மகள் சிவகாமி (30).

கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்த இருவரும், அங்கிருந்து சிவகாமி ஊரான அகரம்

கிராமத்துக்கு வியாழக்கிழமை மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா். மொபெட்டை சிவகாமி ஓட்டிச் சென்றாா்.

ADVERTISEMENT

சின்னசேலத்தை அடுத்த கனியாமூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மொபெட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், அஞ்சலை டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாா்.

சிவகாமி காயமின்றி தப்பினாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு, அஞ்சலையின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீஸாா், டிராக்டா் ஓட்டுநரான தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT