கள்ளக்குறிச்சி

மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளைஞா் உயிரிழப்பு

1st Dec 2022 01:25 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், எலம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் திருமலை (18). இவா் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா்.

திருமலை சிறு வயதிலிருந்தே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பழவங்கூா் கிராமத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 27-ஆம் தேதி வந்திருந்தாா். கடந்த 28-ஆம் தேதி இரவு அதே ஊரின் ஏரிப்பகுதிக்கு உறவினா் மகன் ராஜேஷுடன் சென்றாா்.

அங்கு திருமலைக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவருக்கு திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த திருமலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT