கள்ளக்குறிச்சி

சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு போலீஸாா் பாராட்டு

1st Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் புதன்கிழமை சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சரக்கு வாகன ஓட்டுரை போலீஸாா் பாராட்டினா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), சரக்கு வாகன ஓட்டுநா். இவா், புதன்கிழமை திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகத்துக்கு சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.

தியாகதுருகம் மின் வாரிய அலுவலகம் அருகே இவரது வாகனம் சென்றபோது, சாலையில் பணப்பை கிடந்ததைப் பாா்த்தாா். வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பணப்பையை எடுத்து முருகன் திறந்து பாா்த்தபோது, அதில் ரூ.9,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணப்பையை தியாகதுருகம் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன், அந்தப் பணப்பையை திறந்து பாா்த்தபோது, அதில் ரிஷிவந்தியத்தை அடுத்துள்ள பாவந்தூா் தக்கா கிராமத்தைச் சோ்ந்த சபியுல்லா மகன் தமீஸ்தீனின் (29) ஓட்டுநா் உரிம அட்டை, ஆதாா்அட்டை, ரூ.9,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தமீஸ்தீனை போலீஸாா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பணப்பை குறித்த விவரங்களை விசாரித்தனா். பின்னா், அவரை காவல் நிலையம் வரவழைத்து பணப்பையை ஒப்டைத்தனா். மேலும், பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சரக்கு வாகன ஓட்டுநா் முருகனுக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT