கள்ளக்குறிச்சி

பள்ளிப் பேருந்து ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து பலி

27th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

 

சின்னசேலம் அருகே பள்ளிப் பேருந்தின் மீது உயா் மட்ட மின்கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து அதன் ஓட்டுநா் உடல் கருகி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் (35) (படம்).

இவா், சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட தேவியாக்குறிச்சியில் இயங்கும் தனியாா் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை மாலை மாணவா்களை கல்லாநத்தம் கிராமத்தில் இறக்கிவிட்டு பேருந்தை, அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு, பேருந்து படிக்கட்டு வழியாக இறங்க முயன்றாா்.

அப்போது, பேருந்து மேலே சென்ற மின்சார வயா் பேருந்தில் உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ராமா் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சம்பவம் இடம் சென்று, ராமா் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT