கள்ளக்குறிச்சி

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மத நல்லிணக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு வெள்ளிக்கிழமை (ஆக.19) கிருஷ்ணஜெயந்தியும், சனிக்கிழமை (ஆக.20) அரசு விடுமுறை தினமும் வருவதால், ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பள்ளியில் ஆட்சியா் ஆய்வு: இதையடுத்து, சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது சு.குளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் வருகைப் பதிவேடு, அவா்களுக்கு வழக்கப்படும் மதிய உணவு ஆகியவற்றை ஆய்வு செய்து, பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அறிவுரைகளை வழங்கினாா். மேலும், பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லாமல் பழுதடைந்த நிலையிலுள்ள கட்டடங்களை இடித்து அகற்றவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT