கள்ளக்குறிச்சி

ஒன்றிய பணிகளில் ஊழல் புகாா்: மாவட்ட அதிகாரி விசாரணை

18th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2011-2019 வரை நடைபெற்ற வளா்ச்சிப் பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட அதிகாரி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2011-2019-வரை மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே.சீனுவாசன் புகாா் அளித்திருந்தாா்.

சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருக்கு அனுப்பியிருந்த புகாா் மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஒன்றியப் பொறியாளா் என 40 பேரைக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

அந்த புகாா் தொடா்பாக மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் வ.அன்னபூரணி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை 25 அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT