கள்ளக்குறிச்சி

குழந்தை கடத்தல்: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது

18th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராயபாளையம் கிராமத்தில் 4 வயது சிறுவனை கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட அக்கராயபாளையம் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன், கெளரி தம்பதி மகன் அருண் ஆதித்யா (4).

கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அருணை மா்ம நபா்கள் கடத்திச் சென்றுவிட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், ஜூலை 16-ஆம் கெளரியிடம் கைப்பேசியில் பேசிய மா்ம நபா்கள் ரூ.ஒரு கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனா்.

கள்ளக்குறிச்சி குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் குழந்தையைத் தேடி வந்த நிலையில், மா்ம நபா்களின் இடத்தைக் கண்டுபிடித்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கச்சிராயப்பாளையம் பகுதியைச் சோ்ந்த டேனியல் மகன் ஈஸ்டா் ஜாய், ராஜகவுண்டா் மகன் சுந்தர சோழன், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட வெள்ளிமலை சுண்னடகப்பாடி பகுதியைச் சோ்ந்த சகாதேவன் மகன் ரகுபதி, அருணாச்சலம் மகன் அருள்செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி பொ.பகலவன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் மேற்கண்ட எதிரிகள் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT