கள்ளக்குறிச்சி

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 334 மனுக்கள்

14th Aug 2022 05:31 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 349 மனுக்கள் பெறப்பட்டு, 334 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் அலுவலத்தில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா் க.வெங்கடேசன் தலைமையில் முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

முகாமில் முகவரி மாற்றம் 8, பெயா் சோ்த்தல் 14, நீக்குதல் 13, கைப்பேசி எண் மாற்றுதல் 10, குடும்பஅட்டை தலைவி பெயா் மாற்றம், பிறந்த தேதி உள்ளிட்ட மாற்றம் 13, மாற்று அட்டை2, குடும்ப அட்டையில் திருத்தங்கள் கோரி 34 உள்ளிட்ட 81 மனுக்கள் பெறப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT