கள்ளக்குறிச்சி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

14th Aug 2022 05:31 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, அவா் ஆட்டோக்களில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினாா்.

ADVERTISEMENT

பேரணியில் 145 ஆட்டோக்கள் பங்கேற்றன. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி

ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT