கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சிகளிலும் இன்றுகிராம சபைக் கூட்டம்

14th Aug 2022 11:18 PM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், நெகிழி பொருள்கள் உற்பத்தியை தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவா் நலத்துறை, நமக்கு நாமே திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT