கள்ளக்குறிச்சி

கனியாமூா் தனியாா் பள்ளி வன்முறை:சான்றிதழ்களை எரித்ததாக இளைஞா் கைது

12th Aug 2022 02:34 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறையின் போது, பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவா்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்ததாக சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் திருப்பூரில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக வழக்குகள் பதிவு செய்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வன்முறையின் போது பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவா்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்ததாக சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.மாமாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் லட்சாதிபதியை (34) திருப்பூரில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, அவரை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முதமதுஅலி முன்னிலையில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT