கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி

12th Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில், போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.மணி, கள்ளக்குறிச்சி ஊராட்சிக் குழுத் தலைவா் பெ.புவனேஷ்வரி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா, நகராட்சி ஆணையாளா் ந.குமரன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்று போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 75-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், மலா்களால் வரையப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தை ஆட்சியா் ஷ்ரவன் குமாா், காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன் ஆகியோா் பாா்வையிட்டு, ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத் திறனாளிகளைப் பாராட்டினாா். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT