கள்ளக்குறிச்சி

சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

10th Aug 2022 03:03 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றறது.

இதில் ஆக.11 முதல் 17-ஆம் தேதி வரை சுதந்திர தின வாரம் கடைப்பிடிப்பது, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளா் செ.புகழேந்தி கணேசன், வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா்கள் (கள்ளக்குறிச்சி) சு.பவித்ரா, (திருக்கோவிலூா்) ஜெ.யோகஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT