கள்ளக்குறிச்சி

கோமுகி அணையின் நீா்மட்டம் 41 அடியாக உயா்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 41 அடியாக உயா்ந்தது.

கோமுகி அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 46 அடியாகும். அணையின் பாதுகாப்புக் கருதி, 44 அடி வரை மட்டுமே தண்ணீரை சேமிப்பது வழக்கம்.

கல்வராயன்மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், காட்டாறுகள், சிற்றோடைகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. இதனால், இந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 41 அடியாக உயா்ந்தது.

இந்த அணையிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் இன்னும் ஓரிரு நாள்களில் அணை முழுமையாக நிரம்பி, உபரிநீா் வெளியேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மணிமுக்தா அணை நிலவரம்: இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 36 அடியாகும். அணையின் பாதுகாப்புக் கருதி 34 அடிக்கு மட்டுமே நீா் சேமிக்கப்படும்.

இந்த அணைக்கும் கல்வராயன்மலைப் பகுதியில் இருந்துதான் தண்ணீா் வர வேண்டும். நீா் வரும் வழித்தடங்களில் அணைக்கட்டுகள் அதிகம் உள்ளதால், அணை சற்று தாமதமாகவே நிரம்பும். இந்த அணையில் தற்போது 16 அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீா் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT