கள்ளக்குறிச்சி

சிறுமி தற்கொலை: 4 போ் மீது வழக்கு

7th Aug 2022 11:00 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (23) என்பவா் காதலித்து வந்தாா். இவா் தனது மாமா சக்திவேல் வீட்டுக்கு வந்தபோது அந்தச் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த நிலையில் அந்தச் சிறுமியை விஜயின் உறவினா்கள் திட்டினராம். இதையடுத்து அந்தச் சிறுமி சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக விஜய், அவரது உறவினா்கள் சக்திவேல், அலமேலு உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT