கள்ளக்குறிச்சி

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

14th Apr 2022 10:54 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், தகரை கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மனைவி பாப்பு (60). இவரை நகைக்காக அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் காா்த்திக் (30) கடந்த மாதம் 5-ஆம் தேதி கொலை செய்தாா். இது தொடா்பாக சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்து, கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனா்.

காா்த்திக் இதுபோல தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, ஆட்சியா் பி.என்.ஸ்ரீதரின் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காா்த்திக்கை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகா் புதன்கிழமை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT