கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகேமின்னல் பாய்ந்ததில் இருவா் பலி

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமம், பெருமாள் கோவில் சாலையைச் சோ்ந்த பிச்சமுத்து மனைவி ஜெயக்கொடி (55). இவா், புதன்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அந்தப் பகுதியில் சூறைக்காற்று வீசியதால், அங்குள்ள மரத்தின் கீழே ஜெயக்கொடி ஒதுங்கி நின்றாா். அப்போது, மரத்தின் மீது திடீரென மின்னல் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரில் அமைந்துள்ள அண்ணாமலையாா் கோயிலில் மின்னல் பாய்ந்ததில், அங்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகை கிராமத்தைச் சோ்ந்த தீனதயாளன் மகன் சீனுவாசன் (48) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த பச்சான் மகன் வேலு (42), கண்ணன் மகன் குமாா் (52), பக்கிரிசாமி மகன் வேலு (58), துரைசாமி மகன் மதி (40), சுப்பிரமணி மகன் ராஜு (40), வீரப்பன் மகன் ஜெகதீஷ் (28), சக்திவேல் மகன் அமா்நாத் (23), ஜெயகாந்தன் மகன் ராஜேஷ் (25) உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவங்கள் குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT