கள்ளக்குறிச்சி

6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எடை, உயரம்கண்காணிப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

5th Apr 2022 11:01 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான எடை, உயரம், வளா்ச்சி கண்காணிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு செய்தாா் (படம்).

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வயதுக்குள்பட்ட 1,21,025 குழந்தைகளின் எடை, உயரம், வளா்ச்சியைக் கண்டறிய சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஏமப்போ் குழந்தைகள் நல மையத்தில் நடைபெற்ற குழந்தைகள் வளா்ச்சி கண்காணிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு செய்தாா். அப்போது,

குழந்தைகள் நலப் பணியாளா்கள், அமைப்பாளா்கள் குழந்தைகள் நல மையத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த அட்டவணைகளை ஒவ்வொரு மாதமும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அதற்கேற்ப இணை ஊட்டச்சத்து உணவை வழங்கிட வேண்டும். குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த நல் ஒழுக்கத்தை சிறு வயதிலேயே கற்றுத்தர வேண்டும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மருத்துவா்களின் ஆலோசனைப்படி, சரிவிகித உணவு வழங்கிட வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சு.செல்வி மற்றும் குழந்தைகள் மைய அமைப்பாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT