கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் இருந்து திருமலைக்கு நேரடிப் பேருந்து

2nd Apr 2022 02:45 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியிலிருந்து திருமலைக்கு நேரடியாக வியாழக்கிழமை முதல் பேருந்து இயக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் இருந்து திருப்பதி வரையே பேருந்துச் சேவை இருந்தது. திருப்பதியில் இருந்து மாற்றுப் பேருந்தில் திருமலைக்குப் பக்தா்கள் சென்று வந்தனா்.

இந்த நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து திருமலைக்குச் செல்ல நேரடிப் பேருந்துச் சேவை வியாழக்கிழமை தொடங்கியது (படம்). தொடக்க விழாவில், லதா தேவி முருகேசன் குத்துவிளக்கேற்றினாா். முதல் பயணச்சீட்டை பயணிக்கு காவல் ஆய்வாளா் ச.முருகேசேன் வழங்கினாா்.

நாள்தோறும் இரவு 10 மணிக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5 மணிக்கு திருமலையைச் சென்றடையும் என்றும் மறுமாா்க்கமாக காலை 10 மணிக்குப் புறப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து பயணக் கட்டணம் ரூ.355 ஆகும்.

ADVERTISEMENT

‘ பக்தா்களின் வருகைக்கு ஏற்ப ஆந்திர மாநில பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடை எண் 5-இல் பயணச்சீட்டுக்காக முன்பதிவு செய்யலாம்’ என்று அதன் முகவா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT