கல்வராயன்மலைப் பகுதியில் குரும்பாலூா் கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததில், கூரை வீடு தீயில் கருகியது.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கல்வராயன்மலைப் பகுதிக்கு உள்பட்ட குரும்பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ராஜி. இவரது மனைவி ஜெயராணி. இந்தத் தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், வீட்டில் உள்ள எரிவாயு உருளை அடுப்பை வியாழக்கிழமை இரவு சுமாா் 9 மணிக்கு பற்றவைத்துவிட்டு, அருகில் உள்ள வீட்டுக்கு ஜெயரானி சென்று விட்டாராம்.
சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் அவரது கூரை வீடு முற்றிலும் தீயில் கருகியது.