ஈரியூா் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு இயந்திரம் வைக்கப்பட்டும், செயல்படுத்தாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அந்த நிலையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றே அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஈரியூா் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயில் அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை தொடங்க முயற்சி நடைபெற்றது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தால், ஈரியூா், அம்மகளத்தூா், செம்பாக்குறிச்சி, உலகியநல்லூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைவா்.
இதற்காக, கடந்த 20 நாள்கள் முன் இயந்திரத்தை சம்பந்தப்பட்ட துறையினா் வைத்துவிட்டு சென்றனா்.
இதனால், நெல் களம் முன்பாகவும் சாலை ஓரத்திலும் குவியல் குவியலாக நெல் மூட்டைகளை விவசாயிகள் கொட்டிவைத்தனா். ஆனால், கொள்முதல் நிலையம் தொடங்கப்படாதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனுவையும் அளித்தனா். ஆகவே, நெல் கொள்முதல் மையத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.