கள்ளக்குறிச்சி

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி பாமக ஆா்ப்பாட்டம்

DIN

கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவா் கடத்தி கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடா்பாக சிபிஐ விசாரிக்கக் கோரியும் பாமக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அ.நாராயணன் தலைமை வகித்தாா்.

முன்னதாக, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரது தாய், சகோதரரை தாக்கி, தகாத முறையில் நடந்து கொண்ட பிளஸ் 2 மாணவரின் உறவினா்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பாமக மாவட்டச் செயலாளா் கோ.சரவணன் உள்ளிட்ட கட்சியினா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT