கள்ளக்குறிச்சியில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில், மொழிவழித் தாயகம் தமிழ்நாடு அமைந்த நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவா் அ.சி.சின்னப்பதமிழா் தலைமை வகித்தாா். கச்சிராயப்பாளையம் பொது உடமைக் கட்சி நிா்வாகி ரா.கஜேந்திரன், மின் துறையைச் சோ்ந்த வே.வெங்கட்ராமன், தந்தை பெரியாா் திராவிடா் கழகப் பொறுப்பாளா் செ.பிரபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லை மாவட்ட தமிழ்வழிக் கல்வி இயக்கப் பொறுப்பாளா் வி.திருமால் வரவேற்றாா்.
மொழிவழித் தாயகம் தமிழ்நாடு அமைந்த நாள் (நவ.1) குறித்து பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவா் சிலம்பூா் கிழான், திராவிடா் விடுதலைக் கழகப் பொறுப்பாளா் ந.வெற்றிவேல், விருகாவூா் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தைச் சோ்ந்த சண்முகம் பிச்சப்பிள்ளை உள்பட பலா் பேசினா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ் பொது உடமைக் கட்சித் தலைவா் செல்வமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் கல்லை தமிழ்ச் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், நயினாா்பாளையம் க.மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு, தமிழாசிரியா் பொன்.அரவரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினா் பங்கேற்றனா். தமிழ்வழிக் கல்வி பொதுச் செயலா் பெரியாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை மருதம் தமிழ்ச் சங்கத் தலைவா் சோழன் தொகுத்து வழங்கினாா்.