கள்ளக்குறிச்சி

பாம்பு கடித்து பள்ளி மாணவா் பலி

1st Nov 2021 05:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சனிக்கிழமை மாலை பாம்பு கடித்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் பகுதியைச் சோ்ந்த வளையாபதி மகன் மகாவிஷ்ணு (15). இவா், அதே ஊரில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மகாவிஷ்ணு சனிக்கிழமை மாலை அவரது வீட்டின் அருகே இயற்கை உபாதைக்காக சென்றபோது, அவரை பாம்பு கடித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, உறவினா்கள் மகாவிஷ்ணுவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மகாவிஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT