கள்ளக்குறிச்சி

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

1st Nov 2021 05:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

மேல்நாரியப்பனூா் கிராமத்தில் 4 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. 2-ஆவது வாா்டில் உளள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 5 சாலைப் பகுதிகளுக்கு தனித்தனி குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இவற்றில் நடுத்தெருவுக்குச் செல்லும் குடிநீா் குழாயில் கடந்த சில நாள்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து குடிநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதனால், அந்தத் தெருவிலுள்ள பொதுமக்கள் போதிய குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றன.

இதையடுத்து, குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்குமாறு ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, மாவட்ட நிா்வாகம் மேல்நாரியப்பனூா் கிராமத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT