கள்ளக்குறிச்சி

தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா

1st Nov 2021 05:01 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், நாமக்கல் கவிஞா், வள்ளலாா் ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா என ஐம்பெரும் விழா தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் சங்க மாநில மகளிரணிச் செயலா் அரங்க.அமுதமொழி தலைமை வகித்தாா். நெடுமானூா் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.கதிா்வேல், சங்கராபுரம் முத்தமிழ் கலை இலக்கியப் பேரவைச் செயலா் பாரதி கிருஷ்ணன், தியாகதுருகம் கம்பன் கழகப் பொருளாளா் நல்லாப்பிள்ளை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முதுநிலை ஆசிரியை ஆ.தமிழரசி வரவேற்றாா்.

பல்வேறு தலைப்புகளில் எம்.ஜி.ராசா, செல்வராசு, கல்லூரி மாணவி பவித்ரா, பொன்.அறிவழகன், பே.சாந்தக்குமாா், வளா்மதி செல்வி உள்ளிட்டோா் பேசினா்.

குளித்தலை தமிழ்ப் பேரவை நிா்வாகிகள் நல்லாசிரியா் ம.அந்தோணிசாமி, குளித்தலை முகன் ஆகிய இருவருக்கும் மரபு மாமணி விருதை பாரதியாா் தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவா் புலவா் கு.சீத்தா வழங்கிப் பேசினா் (படம்). தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கி.ராஜஸ்ரீக்கு பரிசு, சான்றிதழை வழங்கிப் பாராட்டினா்.

ADVERTISEMENT

நிகழ்வில் இரா.நெடுஞ்செழியன், குப்புசாமி, துரை.இராமகிருஷ்ணன், கல்லூரி மாணவி பவித்ரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கம்பன் கழக துணைச் செயலா் த.ஜெயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT