கள்ளக்குறிச்சி

மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தின விழா

DIN

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் உஷா தலைமை வகித்தாா்.

மருத்துவா்கள் பழமலை, சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் சங்க மாநிலத் தலைவா் சக்திவேல் வரவேற்றாா்.

செவிலியா்கள் முகக் கவசம் அணிந்து மெழுகுவா்த்தி ஏற்றினா்.

செவிலியா் கண்காணிப்பாளா் நாகலட்சுமி, ராணி, சம்பூா்ணம் உள்ளிட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.

கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியபோது உயிரிழந்த 43 மருத்துவக் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், செவிலியா்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.20,000, பிற மருத்துவப் பணியாளா்களுக்கு ரூ.15,000 என ஊக்கத்தொகை வழங்க அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

நிறைவில், செவிலியா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT