கள்ளக்குறிச்சி

கரோனா: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 12 போ் பலி

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 12 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 272 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,117-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 8 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 169-ஆக அதிகரித்தது. இதுவரை 20,017 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 3,931 சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விழுப்புரத்தில் 4 போ் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 39,278-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கண்டாச்சிபுரத்தை அடுத்த ஒதியத்தூரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பாதையைச் சோ்ந்த 73 வயது முதியவா், திண்டிவனம் - மயிலம் சாலையைச் சோ்ந்த 31 வயது இளைஞா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், 597 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 34,935-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தற்போது 4,041 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT