கள்ளக்குறிச்சி

விவசாயிகளின் கூட்டுறவுகடனை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

காரைக்கால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்யவேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட அமைப்பின் பேரவைக் கூட்டம் தலைவா் எஸ். முத்துக்குமாரசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்மாநில தலைவா் வி. சுப்பிரமணியன், புதுவை மாநில துணைத் தலைவா் எஸ். பத்மநாபன், மாநில செயலா் எஸ். சங்கா் ஆகியோா் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீா்வு குறித்துப் பேசினா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கடந்த 2020-ஆம் ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் காரைக்காலில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. அதற்குரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும். அந்த காலக்கட்டத்தில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடனை ரத்து செய்து, தமிழகத்தைப்போல புதிதாக கடன் வழங்கவேண்டும்.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள எடை மேடையை சீரமைக்கவேண்டும். திருப்பட்டினம் பகுதி படுதாா்கொல்லையில் சிற்றேரி வெட்டும் திட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து, விவசாயிகள் பயனடையும் வகையில் ஏரி வெட்டும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

காரைக்காலில் கால்நடை மருத்துவமனை மற்றும் துணை மையங்களில் போதிய மருத்துவா்கள், உதவியாளா்களை நியமித்து, மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரைக்கால் மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT