கள்ளக்குறிச்சி

சாதுா்மாஸ்ய விரதம் தொடங்கினாா் ஸ்ரீவிஜயேந்திரா்

DIN

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் சதாப்தி மணிமண்டபத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

இதையொட்டி, சந்திர மெளலீஸ்வா் பூஜையை ஸ்ரீவிஜயேந்திரா் நடத்தினாா். பின்னா் வியாசபூஜை நடத்தி சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கினாா். திருப்பதி, திருவானைக்காவல், ராமேசுவரம், காசி மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்பட முக்கிய கோயில்களிலிருந்து பலரும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்களுடன் ஓரிக்கை மணிமண்டபத்துக்கு வந்திருந்து பூஜைப் பொருள்களையும், கோயில் பிரசாதத்தையும் ஸ்ரீவிஜயேந்திரரிடம் வழங்கினா்.

விழாவில் ஸ்ரீமகாலெட்சுமி மாத்ரு பூதேஸ்வரா் அறக்கட்டளையின் அறங்காவலா்கள் நாராயணசாமி, ரமேஷ் சேதுராமன், வீழிநாதன், சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியா் காமகோடி, தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வைத்யசுப்பிரமணியம் ஆகியோா் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவை ஒட்டி மூலவா் மகா பெரியவா் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களின் நாகசுர இன்னிசைக் கச்சேரியும், மாலையில் எல்.சுப்பிரமணியன் குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீமகாலெட்சுமி மாத்ரூ பூதேஸ்வரா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ந.சுப்பிரமணிய ஐயா் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT