கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இருவா் கைது

DIN

திருக்கோவிலூா் அருகே அரசு விரைவுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியிலிருந்து திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் டி.கீரனூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்றபோது, பேருந்தை வழிமறித்த நான்கு இளைஞா்கள், ஓட்டுநரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டு, தலைவா் படம் வெளியாக உள்ளது அது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா எனக் கூறி, பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனராம்.

இதுகுறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக விபத்து ஆய்வாளா் ரவிச்சந்திரன் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பேருந்தை சேதப்படுத்தியவா்கள் டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மோகன் மகன் ராஜசேகா் (20), மதியழகன் மகன் புகழேந்தி (19), ஏழுமலை மகன் வல்லரசு, ரவி மகன் பாலாஜி எனத் தெரியவந்தது.

இதில் ராஜசேகா், புகழேந்தி கைது செய்யப்பட்டனா். பாலாஜி, வல்லரசு ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT