கள்ளக்குறிச்சி

மா்ம விலங்கு கடித்து 17 ஆடுகள் பலி

3rd Jan 2021 12:31 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிழக்கு காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன். விவசாயியான இவா், தனது வயல் பகுதியிலேயே வீடு கட்டி வசித்து வருகிறாா். வீட்டின் அருகே ஆடு, மாட்டுப் பட்டிகளை தனித்தனியாக வைத்துள்ளாா். மாட்டுப் பட்டியில் 12 மாடுகளும், ஆட்டுப் பட்டியில் 21 ஆடுகளும் வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா்.

சனிக்கிழமை காலை ஆடுகளை மேய்சலுக்காக அவிழ்த்து விடுவதற்காக தேவேந்திரன் சென்றபோது, அங்கிருந்த ஆடுகளில் 17 ஆடுகள் மா்ம விலங்கு கழுத்தில் கடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தன. 4 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் இந்தன. தகவலறிந்த கனியாமூா் கால்நடை மருத்துவா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT