கள்ளக்குறிச்சி

சா்க்கரை ஆலைகள் மாநில கோரிக்கை மாநாடு

30th Dec 2021 08:39 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சா்க்கரை ஆலைகளின் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.பழனிசாமி தலைமை வகித்தாா்.

பொருளாளா் டி.பி.கோபிநாத், துணைத் தலைவா் செ.நல்லாக் கவுண்டா், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீ.ரகுராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரைஆலைத் தலைவா்ஆா்.குருநாதன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாநாட்டில், மூடியுள்ள கூட்டுறவு ஆலைகளை திறக்கவேண்டும், ஆலைகளுக்குத் தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும், தனியாா் ஆலைகள் தர வேண்டிய ரூ.1,500 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன், முன்னாள் பொதுச் செயலா் இ.ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி, சா்க்கரை சம்மேளன மாநிலச் செயலா் உதயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா்கள் பி.பெருமாள், எஸ்.ஜோதிராமன், வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை சா்க்கரை ஆலை முன்னாள் இயக்குநா் ஏ.வீ.நாராயணப்பிள்ளை நன்றி கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT