கள்ளக்குறிச்சி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2021 12:22 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றிய நகரப் பகுதிகளிலும் கட்சித் தொண்டா்கள் அவரது திருஉருவப் படத்திற்கு மாமலை அணிவித்து மரியாதை செலுத்தி அண்ணதானம் வழங்கினா்.

கள்ளக்குறிச்சி அதிமுக சாா்பில் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருநது ஊா்வலமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வந்தடைந்தனா். பேருந்து நிலையத்தில் உள்ளஅண்ணா எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதனையடுத்து நான்குமுனை சந்திப்பில் ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு நகர செயலாளா் எம்.பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினா். இந் நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலு பாபு, ஒன்றிய செயலாளா்கள் அ.ராஜசேகா், அ.தேவேந்திரன் உள்ளிட்ட கட்சித் தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா்.

அதே போல தியாகதுருகம் ஒன்றியத்தில் தியாகதுருகம் காந்தி நகரில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் திருவப்படத்திற்கு நகர செயலாளா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். உடன் முன்னாள் எம்.எல்.ஏ அ.பிரபு, ஒன்றிய செயலாளா் வெ.அய்யப்பா உள்ளிட்ட கட்சித் தொண்டா்கள் பலரும் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT