கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படுமா?

DIN

கள்ளக்குறிச்சியில் போதிய இடவசதியின்றி செயல்படும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பாழடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் கடந்த 1920-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் இரு பாலா்களும் பயின்று வந்தனா். பின்னா்,1972-ஆம் ஆண்டு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியாகவும், 1978-இல் மகளிா் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

தற்போது இந்தப் பள்ளியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்று வருகின்றனா். எனினும், மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளியில் வகுப்பறை வசதி இல்லை. இதனால், கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை அருகே கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், ஆய்வகம் போன்ற வசதிகள் பழைய பள்ளி வளாகத்திலேயே இருந்து வருகின்றன.

புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கு மாணவிகள் போக்குவரத்து மிகுந்த காந்தி சாலை, நேப்ஹால் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் விபத்து அச்சத்துடன் மாணவிகள் சென்று வரும் நிலை உள்ளது.

காந்தி சாலையில் இயங்கும் பள்ளியில் 1936-இல் கட்டப்பட்ட 4 பழைய வகுப்பறை கட்டடங்கள் பாழடைந்து செயல்படாமல் மூடிக் கிடக்கின்றன. அந்த, பழைய கட்டடங்களில் சிதிலமடைந்த டேபிள், பெஞ்ச் உள்ளிட்ட பொருள்கள் உள்ளன. விஷ ஜந்துகளின் புகலிடமாக இருக்கும் இந்த கட்டடங்களை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டித்தர வேண்டும்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இப்போதே புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியைத் தொடங்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியரும், கல்வித் துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT