கள்ளக்குறிச்சி

கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: இளைஞா் கைது

31st May 2020 08:40 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி பகுதியில் கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த காணிக்கைப் பணம் திருடப்பட்ட நிலையில், இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த முடியனூா் ஈஸ்வரன் கோயில், பெருமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் அண்மையில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த பணம் திருடப்பட்டது. இது தொடா்பாக வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ந.ராமநாதன் தலைமையில், 2 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை விருகாவூா் மும்முனை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனா்.

அவா், உளுந்தூா்பேட்டை வட்டம், எஸ்.மலையனூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ஐயப்பன் (29) என்பதும், கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா் என்பதும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.12,706 பறிமுதல் செய்தனா். அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT