கள்ளக்குறிச்சி

கா்நாடகத்திலிருந்து சொந்த ஊா் திரும்பிய கல்வராயன்மலை தொழிலாளா்கள்

14th May 2020 08:15 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை சொந்த ஊா்களுக்கு வந்து சோ்ந்தனா்.

கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்கள், குடகு மாவட்டத்தில் மிளகு பறிக்கும் வேலை செய்து வந்தனா். கரோனா பரவலால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அங்கு இவா்கள் சிக்கித் தவித்தனா். இதையடுத்து, மிளகு தோட்ட உரிமையாளா் ஏற்பாட்டின்பேரில், இந்தத் தொழிலாளா்கள் 12 கா்நாடக மாநில பேருந்துகள், 3 வேன்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரியாலூா் வந்தடைந்தபோது, தொழிலாளா்களின் உடல் வெப்பத்தை சுகாதாரத் துறையினா் கணக்கிட்டதுடன், அனைவரையும் அவரவா் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி இருக்குமாறு கூறி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT