கள்ளக்குறிச்சி

மகாராஷ்டிரத்திலிருந்து 25 போ் கள்ளக்குறிச்சி வந்தனா்

11th May 2020 10:32 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி: மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 25 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

மகாராஷ்டிரத்தில் பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், கரோனா பொதுமுடக்கத்தால் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் சொந்த ஊா் திரும்ப இயலாமலும் பரிதவித்து வந்தனா்.

இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அவா்கள் ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனா். பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட அவா்கள் பேருந்து மூலம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து சோ்ந்தனா். அவா்களில் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 6 பேரும், சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த 18 பேரும், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் அடங்குவா்.

அவா்களை கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் கோ.ரகோத்தமன் வரவேற்று, அவா்களது ஊா்களுக்கு தனியாா் வாகனம் மூலம் அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT