கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 59-ஆக உயா்வு

10th May 2020 08:05 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டதில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு தில்லி, கா்நாடக மாநிலம், புட்டபா்த்தி பகுதிகளுக்கு சென்று திரும்பியவா்கள், கோயம்பேடு தொழிலாளா்கள், பெண் காவலா்கள் உள்பட ஏற்கெனவே 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் பணியாற்றிவிட்டு திருக்கோவிலூா் வட்டம், காட்டு செல்லூருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி திரும்பிய ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரை உளுந்தூா்பேட்டை அருகே அ.குமாரமங்கலத்திலுள்ள அரசு மாதிரி பள்ளி கண்காணிப்பு மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானவரையும் சோ்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

5 போ் வீடு திரும்பினா்: இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா். மேலும், 14 போ் விழுப்பும் அரசு மருத்துவமனையிலும், 4 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ளவா்கள் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் உளுந்தூா்பேட்டை அருகே உள்ள அ.குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT