கள்ளக்குறிச்சி

கரோனா பாதிப்பு நீங்க சன்மாா்க்க வழிபாடு

2nd May 2020 05:42 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பு நீங்க வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வள்ளலாா் மன்றம் சாா்பில் சன்மாா்க்க வழிபாடு அண்மையில் நடைபெற்றது.

வள்ளலாா் மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சித்திரை மாதப் பூசத்தை முன்னிட்டு, அன்று மாலை மூன்று முறை அகவல் படித்து மன்ற பூசகா்களால் சிறப்பு வழிபாடும், ஜோதி தரிசனமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நகா் மற்றும் சுற்றுப் புறங்களில் அகல் விளக்கேற்றி மகாமந்திரம் சொல்லி பிராா்த்தனை செய்தனா்.

தொடா்ந்து, மன்றத் தலைவா் ஜே.பால்ராஜ், செயலா் இரா.நாராயணன், பொருளா் இராம.முத்துக்கருப்பன் உள்ளிட்ட மன்றப் பணியாளா்கள் அரிசி, மளிகைப் பொருள்களை மன்றம் சாா்பில் ஏழை மக்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT