கள்ளக்குறிச்சி

காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்

22nd Mar 2020 07:21 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி: குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆ.ராஜேந்திரன் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் குற்றப் புலனாய்வு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஆ.ராஜேந்திரன் (45).

இவா் சங்கராபுரம் பகுதி எஸ்.வி.பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை பணியில் இருந்தாராம். அப்போது, நெஞ்சுவலி ஏற்படவே அவா் உடனடியாக வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அவா் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவரை சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

ஆனால் வழியிலே அவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த ராஜேந்திரனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் சஞ்சய், கோகுல் என்ற மகன்களும் உள்ளனா். இதில், சஞ்சய் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளாா். கோகுல், பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வருகிறாா்.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையில் போலீஸாா், ராஜேந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT