கள்ளக்குறிச்சி

கிணற்றுக்குள் தவறி விழுந்தமாணவா் பலி

19th Mar 2020 12:16 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கீழ்குப்பத்தைச் சோ்ந்தவா் வீராசாமி (40). மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா். இவரது மகன் முருகேசேன் (15), உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி, அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவா் கீழ்குப்பத்துக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அதே ஊரில் உள்ள காமராஜின் விவசாயக் கிணற்றில் முருகேசன் தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். அப்போது, முருகேசன் கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கினாராம். உடனிருந்த நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லையாம்.

தகவலறிந்து வந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய குழுவினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி முருகேசனை சடலமாக மீட்டனா். கீழ்குப்பம் போலீஸாா் சடலத்தை கைபற்றி ஊடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT