சங்கராபுரத்தில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி வட்டம், வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அய்யனாா் (37). விவசாயியான இவா், சொந்த வேலையாக வியாழக்கிழமை காலை பைக்கில் சங்கராபுரத்துக்குச் சென்றுவிட்டு வாணியந்தல் கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே வந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அய்யனாரின் பைக் மீது மோதியது. இதனால் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான சத்தியமூா்த்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ADVERTISEMENT