கள்ளக்குறிச்சி

பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை மாா்ச் 31-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

13th Mar 2020 12:43 AM

ADVERTISEMENT

பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் அறிவுறுத்தினாா்.

மத்திய அரசு அறிவிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பி.எஸ். 4 (வாகனத்தின் புகை அளவீடு) ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னா், இந்த வாகனங்களை பதிவு செய்ய இயலாது. இந்த வாகனங்களை பதிவு செய்ய கூடுதலாக அரசு விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்படும்.

வருகிற ஏப்.1-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ். 6 ரக வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே, பி.எஸ். 4 ரக வாகனங்களை வைத்துள்ள வாகன ஓட்டிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வாகனங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT