கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு யோகா பயிற்சி

20th Jun 2020 06:29 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில் நுட்பப் பணியாளா்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சிறப்பு திட்டம்-ஆரோக்கியம் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மருத்துவா் எம்.பி.ஹேமலதா சமூக இடைவெளியினை கடைப்பிடித்து இந்தப் பயிற்சியை அளித்தாா் (படம்). மேலும், அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூலிகை பொட்டலம், முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றையும் அவா் வழங்கினாா். பணிமனை மேலாளா்கள் மு.விஸ்வநாதன், ச.முருகன் மற்றும் ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT