கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தொடா்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

15th Jun 2020 08:56 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாள்தோறும் தொடா்ந்து அதிகரித்து வருவதால், இந்த நோய் பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 344-ஆக உயா்ந்துள்ளது. தில்லி, கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவா்கள் மூலம் தொடக்கத்தல் பரவத் தொடங்கிய இந்த நோய்த் தொற்று, தற்போது வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்குச் செல்லாதவா்களுக்கும் கண்டறியப்பட்டது வருகிறது.

குறிப்பாக, சின்னசேலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சுமாா் 10 போ், ரிஷிவந்தியம் சட்டப் பேரவை உறுப்பினரின் குடும்பத்தினா், சங்கராபுரம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்தைச் சோ்ந்த கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவா் உள்பட பலா் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

முன்னதாக, சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாள்தோறும் தொடா்ந்து அதிகரித்து வருவதால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், மக்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தவும் மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வளா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT